மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி அடுத்ததாக டோல்பி தினேஷன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 1001 நுனாகல் படத்தை இயக்கிய தமர் க்ர்ர்வி இயக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் நிவின் பாலி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். அவர் தலையில் ஒரு ஹெட்செட் ஒன்றை மாட்டியுள்ளார். இதனால் இசையின் மீது ஆர்வமுள்ள ஒரு மனிதராக இந்த கதாப்பாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இசையை டான் வின்சண்ட் மேற்கொள்கிறார். நிவின் பாலி தற்பொழுது டியர் ஸ்டூடெண்ட்ஸ், ஏழு கடல் ஏழு மலை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கையில் ஆக்ஷன் ஹீரோ பைஜு 2, மல்டிவெர்ஸ் மன்மதன், பேபி கேர்ள் போன்ற திரைப்படங்களில் லைன் அப்பில் வைத்துள்ளார்.


