வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து அந்நாட்டுக்கு வாழச் சென்ற சுவிஸ் குடிமகள் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் La Chaux-de-Fonds நகரைச் சேர்ந்த கிளாடியா என்னும் பெண் 30 ஆண்டுகளுக்கு முன் நைஜீரியா நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அந்நாட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கிளாடியா தன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிளாடியா எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியாவிட்டாலும், கடத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கலாம் என கருதப்படுகிறது.


