TamilsGuide

நடிகை கஜோல் மகள் ஹீரோயினாக வருகிறாரா - அவரே சொன்ன பதில்

பிரபல நடிகை கஜோல் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் பிரபலம் தான். அவர் கடைசியாக தனுஷ் உடன் விஐபி 2ம் பாகத்தில் நடித்து இருந்தார்.

கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் ஹிந்தியில் பாப்புலர் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர்களுக்கு நைசா என்ற மகளும் யுக் என்ற மகனும் இருக்கின்றனர்.

மகள் ஹீரோயின் ஆகிறாரா

இந்நிலையில் கஜோலின் மகள் நைசா பாலிவுட்டில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என அடிக்கடி தகவல்களும் வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நைசா கவர்ச்சி உடைகளில் வெளியில் வரும் போட்டோ, வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

அது பற்றி கஜோலிடம் கேட்டதற்கு அவர் ஒரே வரியில் பதில் அளித்து இருக்கிறார். "என் மகள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார். அவர் சினிமா துறையில் இணையமாட்டார்" என கஜோல் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 
 

Leave a comment

Comment