நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் சித்ஸ்ரீராம் மற்றும் ராப் பகுதியை SVDP பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் உத்வேகத்துடன் அமைந்துள்ளது.பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை யூடியூபில் 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் " சூர்யா சார் ரெட்ரோ திரைப்படத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை மாற்ற சொன்னாரா இல்லை இது சரியில்லை மாற்றுங்கள் என கூறினாரா? என்ற கேள்விக்கு.
கார்த்திக் சுப்பராஜ் " சூர்யா சார் ரெட்ரோ கதையை படித்துவிட்டு படத்தின் கதாநாயகனின் கதாப்பாத்திரம் மிகவும் ஹீரோத்தனமாக இருக்கிறது. நிஜ உலகத்தில் இருந்து மாறுப்பட்டு தோன்றுகிறது. அதை மிகவும் நம்பகத்தன்மையோடு மாற்றுங்கள் என கூறினார். ஹீரோக்களை மிகவும் மாஸாக நிறைய பில்ட் அப் காட்சிகளை வைக்க சொல்லும் நடிகர்களின் மத்தியில் சூர்யா சார் இப்படி சொன்னது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. மேலும் அவர் சொன்ன மாற்றம் எனக்குள் இந்த கதையின் மாற்றத்திற்கு மிகவும் உதவியது" என கூறினார்.
ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


