TamilsGuide

வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 2025 - 2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகசபைத் தெரிவும் பங்குனி 22 ம் நாள், 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Estate Banquet மண்டபத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. புங்குடுதீவு மண்ணை நோக்கிய சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. மண்டபம் நிறைந்த 175 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூகமளித்த இக்கூட்டத்தில் வர்த்தகரும் சமூக‌ சேவையாளருமான சண்முகநாதன் சசிகுமார் அவர்கள் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெற்று பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள்:

தலைவர்: திரு. சசிகுமார் சண்முகநாதன்
செயலாளர்: திரு. நாகதீபன் குணபாலசிங்கம்
பொருளாளர்: திரு. தீபன் கோபாலபிள்ளை
உபதலைவர்: திருமதி. கேசவராணி சிவராஜா
உபசெயலாளர்: திரு. சிவா தர்மலிங்கம்

வட்டாரங்களிற்கான உறுப்பினர்கள்:

1. திரு. சோம சச்சிதானந்தன்
2. திரு. ஐங்கரன் கதிர்காமநாதன்
3. திரு. இரத்தினசிங்கம் குமாரசாமி
4. திரு. பகீரதன் நாகேசு
5. திரு. சுகுனேஸ்வரன் மார்க்கண்டு
6. திரு. யசோதரன் மதியாபரணம்
7. திரு. குகன் பத்மநாதன்
8. திருமதி. புனிதா தர்மபாலன்
9. திரு. நடா உதயன்
10. திரு. கௌசிகன் கனகலிங்கம்
11. திரு. கிருபானந்தன் ஆறுமுகம்
12. திரு. ஜெயகாந்தன் மயில்வாகனம்

சிறப்பு நிர்வாக உறுப்பினர்கள்

1. திரு. ஸ்ரீநிகேதன் பாலசிங்கம்
2. திரு. சத்தியசீலன் கதிர்காமு
3. திரு. சோதி செல்வா
4. திரு. வில்வ மோகன்

போசகர்கள்:

1. சிவசிறி பஞ்சாட்சர கிருஸ்ணராஜா குருக்கள்
2. திரு. பிறின்ஸ் தேவராஜ்

நன்றி,
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
ஐப்பசி 11,2025 


 

Leave a comment

Comment