TamilsGuide

அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வேசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று முதல் கிடைக்கும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை அஸ்வேசும நலன்புரி பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1.737 மில்லியன் குடும்பங்களுக்கு 12.63 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 580,944 பெரியவர்களின் கணக்குகளில் 2.9 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் வாரியம் மேலும் குறிப்பிட்டுள்ளது
 

Leave a comment

Comment