TamilsGuide

பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஜனாதிபதியுடனான  சர்வகட்சி  மாநாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

குறித்த  அறிவிப்பில் ”அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி தொடர்பாக  கலந்துரையாடி  உரிய திட்டங்களை முன்வைப்பதற்காக பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறும் ஜனாதிபதியிடம் தாம்  கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்  வரி விதிப்பு தீர்மானத்தினை  ஒத்திவைத்திருந்தாலும்  இலங்கை எதிர்கொள்ளும் அபாயம் குறித்து ஜனாதிபதிக்கு  தான்  தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆடை துறையில்  3 லட்சத்து 50 ஆயிரம் பணியாற்றுகின்றனர் எனவும், இதனூடாக சுமார் ஒரு மில்லியன் பேர் பயனடைகின்றனர் எனவும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ஆடை ஏற்றுமதி 38 வீதமாகும் எனவும், அதில் 28 வீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைகக்ப்படுகிறது எனவும், 13 வீதம் ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது எனவும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆகவே ”  புதிய வரிவிதிப்பு தொடர்பாக ஆராய பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சர்வதே நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 2033 முதல் மீண்டும் வெளிநாட்டுக் கடனை செலுத்த  சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பதையும்  தான் முன்மொழிந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது நாட்டின் ஏற்றுமதி  ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது எனவும், ஜீ எஸ் பி  வரிசலுகை  எமது நாட்டிற்கு முக்கியத்துவமானது எனவும் தான் தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச  குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment