TamilsGuide

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளையடுத்து, இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன.

இவற்றில் முட்டைக் கோழிகள்தான் அதிகம். 30 மில்லியனுக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் முட்டையின் விலை அதிகரித்தது.

தற்போது, பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் இல்லாதபோதிலும், முட்டை விலை டசனுக்கு 6.23 டொலருக்கு விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் அடிப்படையான உணவான முட்டையின் விலையைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் சீனர்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment