முதல் பாகத்தில் இருந்த தெளிவான திரைக்கதையும்,கதாபாத்திர வடிவமைப்பும் இந்தப் படத்தில் முற்றிலுமாகயில்லை என உறுதியாக சொல்லலாம்.
மூன்று மணிநேர படத்தில் குறைந்தது 100 காட்சிகளாவது இருந்திருக்கும்.அந்த100 காட்சிகளில் இரண்டே இரண்டு காட்சிகளைத் தவிர மற்ற அனைத்துமே கண்ணை சொருகத்தான் வைத்தன.
மஞ்சுவாரியரை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் காட்சியை மட்டும்தான் ரசிக்க முடிகிறது.
தனது குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் வரையில் மாற்று மதத்தைச் சார்ந்தவன் தனது கூட்டத்தோடு வந்து வெட்டி சாய்க்கிறான்.எஞ்சியிருப்பது ஒரே மகன்.பின்னாளில் அவன் வளர்ந்து ஆளாகி பழிதீர்க்கிறான்.
நாம் அக்காட்சியை எவ்வித உணர்ச்சியுமின்றி பார்க்கின்றோம்.இது ஒன்றே போதும் இத்திரைப்படத்தின் திரைக்கதையின் பலவீனத்தை சொல்ல.
இந்தப் படத்துலே முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி நுழைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?முல்லைப் பெரியாறு அணையை நெடும்பள்ளிஅணை என்று மாற்றிவிட்டார்கள்.
அணையானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அதிகாரிகள் ஆய்வு செய்து மிகுந்த பாதுகாப்போடு இருக்கிறது என அறிக்கையை சமர்ப்பித்தப் பிறகும் கூட இன்னமும் இதை வைத்து அரசியல் செய்கின்றனர் சேட்டன்கள்.இரு மாநில மக்களிடமும் திரைப்படத்தின் மூலம் பகைமையை வளர்ப்பது நியாயம்தானா?
இந்தப் படத்துலே மோகன்லால் படம் நெடுக High Speed Frame-ல்தான் வருவார்.ஒரேயொரு சந்தோஷம், படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.
படத்துலே மஞ்சுவாரியரின் நடிப்பும் இவருடைய கேரக்டர் மட்டுமே ரசிக்கும்படியாகயிருந்தது.
படம் முடிந்து Emperon-3 ன்னு போட்டு சில காட்சிகளையும் போட்டு பயமுறுத்தி வெளியே அனுப்புறானுங்க.
படத்துலே முதல்வர் PKR குடும்பத்தைப் பார்க்கும் போது மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் YSR குடும்பம்தான் நினைவுக்கு வருது.
YSR-ன் மகன் ஜெகன் மோகன்ரெட்டியும் இவருடைய அக்கா ஷர்மிளாவும் அரசியல் எதிரிகள்.ஜெகன் மோகன் ரெட்டி தனது ஆட்சிக்காலத்தில் தனது அக்காவையே கைது செய்து இருக்கிறார் என்பது செய்தி.ஷர்மிளா இப்பொழுது தெலுங்கானாவில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.
மோகன்லால் இதுவரையில் நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கஷ்டப்படாமல் நடித்து இருக்கிறார் என்று உறுதியாக சொல்லலாம்.
படம்நெடுக ஒரே மாதிரியான இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு,எந்த மாடுலேஷனும் இல்லாத Diologue delivery-யை கொண்டு அசத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லணும்.????
மொத்தத்திலே ஒண்ணு சொல்லணும்,எப்போ இந்த Pan India Cinema ஒழியுதோ, அப்பத்தான் பிராந்திய மொழித்திரைப்படங்கள் உருப்படும்.
300 கோடி வசூல் செய்த படத்தை வேண்டுமென்றே எதிர்மறையாக விமர்சனம் செய்திருப்பதாக கூட சிலர் நினைக்கலாம்.
அன்றைக்கு சகலாகலா வல்லவன்,முரட்டுக்காளை படங்கள் கூட வசூல் சாதனை செய்த படங்கள்தான்.இன்றைக்கு அந்தப் படங்களையெல்லாம் நம்மால் பார்க்க முடியுமா?
அதே போல்தான் இந்த எம்புரானும்.
சே மணிசேகரன்


