ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் படத்தின் பாடலான ஏ.கே தி டைகர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை டார்க்கே பாடல் வரிகளை எழுதி பாடியுள்ளார். இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


