ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையொட்டி இப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித்துடன் நடித்தது குறித்தும் அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாகவும் நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கு. எனக்கு பதட்டமா, உற்சாகமா, ஆர்வமா, இன்னும் நிறைய இருக்கு.
அஜித் சார் படங்களுக்கு மார்க்கெட்டிங் & ப்ரோமோஷன் வேலைகள் செய்ய ஆரம்பிச்சப்போ, அவரோட சேர்ந்து நடிக்கணும்னு நான் நினைச்சதே இல்லை. ஆனா, இத்தனை வருஷத்துக்கு அப்புறம், அது இப்போ நடக்குது.
இரவு முழுக்க விழித்திருந்து அதிகாலையில தியேட்டர்ல போய், தியேட்டர் ரவுண்டுகளுக்குப் போயி, பார்வையாளர்களோட வரவேற்பைப் பாத்தோம். இன்று முதல் பையனாத்தான் நான் அதை மறுபடியும் செய்வேன், ஒரே வித்தியாசம், நான் சாரோட ஸ்கிரீன்ல நடிக்கும்போது உங்க ரெஸ்பான்ஸ் பாக்க முடியும்.
என் மேல நீங்க நம்பிக்கை வெச்சதுக்கு நன்றி அஜித் சார். இது ஒரு மிகப்பெரிய மரியாதை. உங்க கூட வேலை செஞ்ச ஒவ்வொரு நாளும், உங்க கருணை, பெருந்தன்மை, உரையாடல்கள், நகைச்சுவைகள், கேலிகள், டிரைவ்கள், எல்லா அறிவுரைகளையும் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். இதை நான் முன்னமே சொல்லிட்டேன், மறுபடியும் சொல்றேன் - இது உங்க கிட்டயும் உங்க கிட்டயும்தான். மறுபடியும் நான் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்.
அஜித் சாரின் ரசிகர்களுக்கு - உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி.. நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் Good Bad Ugly படத்தைப் பார்த்து ஒரு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆதிக் சகோதரரே - என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்... சில மணி நேரத்தில் திரையரங்குகளில் சந்திப்போம்! என்று கூறியுள்ளார்.


