TamilsGuide

உள்ளூராட்சி தேர்தல் - 13 வேட்பாளர்கள் கைது

கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் 11 வாகனங்களும் பொலிஸாரால் கைது மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை 6 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஒரு வன்முறை சம்பவம், 12 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் குறித்து பொலிஸ் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காலக் கட்டத்தில் ஒரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மார்ச் 3 முதல் மொத்தம் 24 வன்முறை சம்பவங்கள் மற்றும் 99 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment