TamilsGuide

கனடாவில் மார்ச் மாதத்தில் அதிக வேலை இழப்பு

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பினால் உருவான பொருளாதார மந்தநிலையால் கனடாவின் வேலைவாய்ப்பில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 2022க்குப் பிறகு மிகப்பெரிய வேலை இழப்பை சந்தித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் 33,000 பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேலை வாய்ப்பின்மை விகிதம் பெப்ரவரி மாதம் 6.6% இருந்த நிலையில் மார்ச் மாதம் 6.7% ஆக உயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் மேலும் தீவிரமாகும்போது, வருங்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்பதற்கான முன் அறிவிப்பு என RSM கனடாவின் பொருளாதார நிபுணர் டூ ஞுயென் (Tu Nguyen) தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் வர்த்தகத் துறையில் அதிக பணிநீக்கம் ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்திலும் இது மேலும் அதிகரிக்கலாம், என்று அவர் கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment