கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 528 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் இன்று (04) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
கைதானவர் மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபர் ஆவார்.
அவர், பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், சுங்க அதிகாரிகள் அவரை இலங்கைக்குள் அடிக்கடி பொருட்களை கடத்தும் நபராக அடையாளம் கண்டுள்ளனர்.