TamilsGuide

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று கலந்து கொண்டிருந்தார்.

பிம்ஸ்டெக் 6வது உச்சிமாநாடு தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இன்று 4ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று பிற்பகல் 5.55 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த ஆண்டு BIMSTEC உச்சிமாநாட்டின் கருப்பொருள், “சுபீட்சம், மீளாற்றல் மற்றும் திறந்த தன்மை” என்பதாகும்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே BIMSTEC உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
 

Leave a comment

Comment