TamilsGuide

தந்தை வழியில் - கார் ரேஸில் கலக்கும் நடிகர் அஜித்தின் மகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.

சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.

குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
 

Leave a comment

Comment