TamilsGuide

காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் - கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காசா முனையில் அதிகமான இடங்களை பிடித்து, இஸ்ரேலின் பாதுகாப்பு பகுதியாக்குவோம். இதனால் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளோம் என நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு காசா முனையின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 50 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நசேர் மருத்துவமனைக்கு 14 உடல்களுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஐந்து குழந்தைகள், நான்கு பெண்கள் அடங்குவர். கான் யூனிஸ் அருகில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு 19 இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அதில் 1 முதல் 7 வயதுடைய ஐந்து குழந்தைகள் அடங்குவர். ஒரு கர்ப்பிணி பெண் உடலும் அடங்கும். காசா நகரில் உள்ள அலி மருத்துவமனைக்கு 21 உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஏழு குழந்தைகள் உடல்கள் அடங்கும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசா முனை முழுவதும் புதிய பாதுகாப்பு பகுதியை இஸ்ரேல் உருவாக்கும். ரஃபா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதியை பாலஸ்தீனத்தின் மற்ற பகுதியில் இருந்து துண்டிப்பதாகவும் கூறினார்.

2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

Leave a comment

Comment