TamilsGuide

தேர்தல் தொடர்பாக 06 முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களில் தேர்தல் தொடர்பான ஆறு (06) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.

கல்கிசை, கொழும்பு வடக்கு, நுகேகொடை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளிலிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் (CMC) சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தல், பொருட்கள் பொதிகளை விநியோகித்தல், தேர்தல் சட்டங்களை மீறி பேஸ்புக்கைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் பெறப்பட்டன.
 

Leave a comment

Comment