சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்தது. .
மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.