TamilsGuide

அனிருத் குரலில் குட் பேட் அக்லி 2nd Single வெளியானது...

நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளின் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலிற்கு God Bless U என தலைப்பு வைத்துள்ளனர். பாடலின் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். பாடலின் ராப் பகுதியை பால் டப்பா பாடியுள்ளார். ஏற்கனவே அனிருத் குரலில் வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வகையில், இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Leave a comment

Comment