TamilsGuide

கனேடிய பொது தேர்தல் - களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்

ஏப்ரல் 28,  அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலில்  நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவ் வேட்பாளர்கள் லிபரல் கட்சி சார்பிலும், இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பிலும் களமிறங்குகின்றனர். 

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில்  லைனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும், நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யூனியன்வில் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

 கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய கரி ஆனந்தசங்கரி ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும், மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினராக பணியாற்றும் ஜுவொனிற்றா நாதன், பிக்கரிங்-புரூக்ளின் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.

இந்த நான்கு தமிழ் வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.  தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
 

Leave a comment

Comment