TamilsGuide

வீட்டை விற்று பாய்மர படகில் வாழும் இந்திய குடும்பம்- அவர்கள் கூறும் காரணம்

வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.

கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

கேப்டன் கௌரவ் கௌதம் (ஓய்வு) மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி, அவரது மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள பாய்மரப் படகில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

தி ரீவா ப்ராஜெக்ட் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில், இந்த குடும்பத்தினர் தங்கள் பயணத்தை அடிக்கடி வீடியோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

மிதக்கும் படகு தான் இவர்களது வீடாக மாறியுள்ளது. இதில் தான் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மேலும், படகில் பயணிப்பதற்காக தங்களது உடமைகளை விற்றுள்ளனர்.

அதாவது, படகில் பயணிக்க உடமைகளை 6000 கிலோவிலிருந்து வெறும் 120 கிலோவாக குறைத்துள்ளனர்.

வைதேகிக்கு மட்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் இருந்தும் தங்களது வாழ்க்கைக்காக அதனை அவர் தவிர்த்துள்ளார். மேலும், படகில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டுமோ அதனை மட்டும் பயன்படுத்துகின்றனர்.

கொரோனா காலத்தில் படகின் விலை குறைவாக இருந்ததால் இவர்களின் கனவு நனவாகியுள்ளது. மேலும், இவர்களின் மகள் கயா பள்ளிக்கு சென்று படிக்காமல், வீட்டில் இருந்தே அவரின் கல்வியை தொடர்கிறார்.

இவர்கள் படகில் பயணிப்பது சவாலானது என்றும், புயல் நிறைந்த கடல்களில் பயணிப்பது சவால் நிறைந்ததும் என்றும் கூறுகின்றனர்.   
 

Leave a comment

Comment