கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்ட 'சரவணா பவன்' சைவ உணவகத்தின் மிசிசாகா கிளையானது அண்மையில் திருத்தியமைக்கப்பெறுவதற்காக இரண்டு மாதங்கள் மூடப்பட்டு வேலைகள் நடைபெற்றன.
மிக அழகியதாக உள்ளேயும் வெளியேயும் திருத்தப்பெற்றுள்ள இந்தக் கிளையின் திறப்பு விழா 26--03-2025 புதன்கிழமை அன்று மதியம் நடைபெற்றது.
வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் கனடாவின் நான்கு கிளைகளிலும் தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பெற்ற சமையல் வல்லுனர்களே பணியாற்றுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.