TamilsGuide

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் கடையில் நூதன மோசடி - நபர் தொடர்பில் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் (Bern) மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் புத்தி பேதலித்தவர் போல இருக்கின்ற போதிலும் அங்குள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் பொருட்களை திருடியதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் புத்தி பேதலித்தவர்போல காட்டிக்கொள்வதால் அவர் திருடியபோது பிடித்து அறிவுரை கூறி வர்த்தகர் அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் குறித்த நபர் மீண்டும் இலங்கைத் தமிழரின் கடையில் தொடர்ந்து திருடியதால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெர்ன் (Bern) வர்த்தக்ர்கள் குறித்த நபர் தொடர்பில் அவதானமாயிருக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Leave a comment

Comment