TamilsGuide

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடர்பான அப்டேட்

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஞாயிற்றுக்கிழமை (23) கம்பளை, அம்புலுவாவாவிற்கு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, ​​சீனத் தூதர் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜயரத்னவை சந்தித்தார்.

சீனத் தூதருடன் கலந்துரையாடிய எம்.பி. ஜெயரத்ன, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக இப்போது யதார்த்தமாகி வருவதாகக் கூறினார்.

Leave a comment

Comment