TamilsGuide

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான்.ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரதூரமான உரிமை மீறல்கள் துஸ்பிரயோங்களில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறலைஉறுதி செய்வதும் தண்டனையின் பிடியிலிருருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது தேசிய ஐக்கியம் தொடர்பான அவர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டன் வரவேற்கின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போதுசட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் பாலியல்வன்முறைகள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் சிரேஸ்ட இராணுவதளபதிகள் பின்னர் கருணா குழு என்ற துணைப்படைக்கு தலைமை தாங்கிய விடுதலைப்புலிகளிற்கு எதிராக இலங்கை இராணுவத்தின் சார்பில் செயற்பட்டவர்உட்பட நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

போக்குவரத்து தடைகள் சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் அடங்கியுள்ளன.
 

Leave a comment

Comment