TamilsGuide

Rise Of Dragon பாடலின் வீடியோ ரிலீஸ்

 இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

'டிராகன்' திரைப்படம் கடந்த 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற Rise Of Dragon வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் கவுதம் மேனன் மற்றும் பிரதீப் இணைந்து ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Leave a comment

Comment