TamilsGuide

ஏமாற்றிய பணத்தை திருப்பி தர வேண்டும்- நடிகை சோனா

நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை 'ஸ்மோக்' என்ற பெயரில் தொடராக எடுத்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது பெப்சி தொழிலாளர்களுக்கும், சோனாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெப்சி யூனியனில் புகார் அளித்திருப்பதாக நடிகை சோனா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சோனா வடபழனியில் உள்ள பெப்சி அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இது பற்றி அவர் கூறுகையில், வேறு வழியில்லாமல் பெப்சி முன்னால் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு என் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி என்னை ஒரு மானேஜர் ஏமாற்றி விட்டார். அதனால் நானே படத்தை தொடங்கி விடலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. பெப்சிக்கு வந்தேன். மாற்றி மாற்றி இங்கும் அங்கும் அலைய விட்டார்கள். என்னை ஏமாற்றிய சங்கர் என்பவர் எல்லா டெக்னீசியன்களுக்கும் அட்ரசை கொடுத்து வீட்டுக்கு அனுப்புறது. இரவு வந்து கதவ தட்டுறது, மிரட்டுவது என தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தார்.

இதை எல்லாம் தாண்டி படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்று நினைக்கும் போது ஹார்ட் டிஸ்க்கை வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்று சொல்கிறார்கள். கொடுத்த பணத்தை மீண்டும் தருமாறு மிரட்டி வருகிறார்கள்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் பெப்சி யூனியனில் வந்து அமர்ந்து உள்ளேன். இங்கு சங்கர் வந்தாக வேண்டும். என் படத்தின் ஹார்ட்டிஸ்கும் என் பணமும் எனக்கு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment