TamilsGuide

அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கும் - டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.

டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.

ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.

அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.

ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment