TamilsGuide

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment