சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது " வீர தீர சூரன் திரைப்படம் ஒரு Raw மிகவும் இண்டன்சாக இருக்கும். எல்லா கதாப்பாத்திரங்களும் சிறு வில்லத்தன்மை உடையவர்கள் தான். ஆனால் அவர்களுக்கென ஒரு நியாயம் இருக்கும். இயக்குனர் அருண் குமார் மிகப்பெரிய ஹாலிவுட் இயக்குனரான மார்டின் ஸ்கார்சி- உடைய ரசிகன். அதனால் இப்படமும் மார்டின் ஸ்கார்சி திரைப்படம் கிராமப்புற பின்னணியில் எடுத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்தப் படம் " என கூறியுள்ளார்.


