நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி கடந்த 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இப்படத்தின் இசையை அனிருத் மேற்கொண்டார்.
படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது. அதிலும் குறிப்பாக அரபி குத்து பாடல் உலகமெங்கும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டது. இப்பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனம் ஆடுவது மிகவும் அட்டகாசமாக இருக்கும். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடினர். இந்நிலையில் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது அரபி குத்து பாடலின் வீடியோ 700 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
விஜய் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


