TamilsGuide

இணைய குற்றமையங்களில் இருந்து மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

மியான்மாரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், இன்று (18) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மியான்மார் அரசாங்கத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் மற்றும் இலங்கையில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்தே இந்த 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னரும் பல சந்தர்ப்பங்களில், இலங்கையர்கள் பலர், இணையக் குற்ற மையங்களிலிருந்து, மீட்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment