TamilsGuide

எனக்கு புற்றுநோய் பாதிப்பா? - விளக்கம் அளித்தார் மம்மூட்டி

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பஸூகா திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது அதற்காக மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மமூட்டி தரப்பினர் பதிலளித்துள்ளனர் அதில் " இது முற்றிலும் தவறான செய்தி. அவர் நலமாக இருக்கிறார். ரமலான் மாதம் என்பதால் அவர் அதற்காக நோன்பு இருந்து வருகிறார். அதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இந்த ஓய்வு முடிந்த பிறகு அவர் மகேஷ் நாராயணன் படப்பிற்கு செல்வார்" என கூறியுள்ளனர்.
 

Leave a comment

Comment