TamilsGuide

O/L பரீட்சை, கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.

மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  கிழக்கு மாகாணத்தில் சீரான காலநிலை நிலவி வரும் நிலையில், மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு வருகை  தந்துள்ளதோடு,  பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று பரீட்சை மண்டபங்களுக்குச்  சென்றதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment