TamilsGuide

பெருசு படத்தில் மக்களின் கவனத்தை பெற்ற இந்த இளம் நடிகர்

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இளம் நடிகரான ஜீவா பாலச்சந்திரன். இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

இவர் இதற்கு முன் சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பு திறமையை தமிழ் திரையுலகம் சீக்கிரம் கவனித்து அவருக்கான கதாப்பாத்திரங்களை வழங்கி பலரின் கவனத்தையும் அன்பையும் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment