TamilsGuide

ஈரானின் சிவப்பு நிறமாக மாறிய கடல்

ஈரான் கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
 

Leave a comment

Comment