அமெரிக்க வரலாற்றில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் இருந்த ஜனாதிபதி (1897 William McKinley ) இதே போன்ற அதீத வரிகளை விதித்தார். இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம் பெருகும் என்று நம்பினார். ஆனால் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்ததாகவும் அதிலிருந்த மீள பல வருடங்கள் சிரப்பட்டதாகவும் அறியலாம்.
சில தசாப்தங்களின் பின்னர் இதே வகையில் ஐனாதிபதியாக வந்த Herbert Hoover இறக்குமதி வரிகள் மூலம் பொருளாதார தோல்வியை கண்டார்.
ஒரு நூற்றாண்டிற்க்கு முன்னர் யு எஸ் இல் இருந்தது அமெரிக்க ‘ தேசிய முதலாளித்துவம் ‘ . இன்று உலகெங்கும் இருப்பது ‘ பல்தேசிய கம்பெனிகளின் ‘கட்டுப்பாட்டில் உள்ள லிபறல் கோப்பரேட்டிஸம் என்னும் வணிக மயமாக்கம்.
இந்த லிபறல் கோப்பரேட்டிஸம் என்பது தனது நாட்டில் உள்ள தேசிய அரசிற்க்கு கூட விசுவாசமானதல்ல. உலகில் எந்த நாட்டில் தனது கிளைகளை நிறுவினால் அதிக இலாபம் வருகின்றதோ அங்கேயே தரித்து விடுவார்கள்.
உ -ம். அமெரிக்காவின் பல்தேசிய கம்பனி ஒன்று மலேசியாவில் கிளை நிறுவி அதிக இலாபம் ஈட்டுமானால் அதனை அமெரிக்க அரசினால் கட்டுப்படுத்த முடியாதது, மட்டுமல்ல அந்த கம்பனியை . . தொழிற்ச்சாலையை அமெரிக்காவிற்க்குள்ளே மட்டுமே நிறுவும்படி வற்புறுத்தவும் முடியாது.
இது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் பரிணாமம் ஆகும். முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்திற்குரியது ‘ தேசிய முதலாளித்துவம் ‘ என்றால் .முதலாளித்துவத்தின் பாரிய வளர்ச்சியின் பின்னர் வருவது பல்தேசிய கொம்பனிகளின் ''லிபரல் கோப்பரேட்டிஸம்''.
ட்ரம்ப் தன்னை ஒரு நாட்டின் ஜனாதிபதியாக கருதாமல் ஒரு தொழில் நிறுவனத்தின் அதிபராக . . நிர்வாகியாக நிறுவ எண்ணுகின்றார். அவரது கட்சியான குடியரசு கட்சியினர் பழமைவாதிகள். இவர்கள் கணிப்பானது ட்ரம்ப் ஒரு மில்லியனர் எனவே அவருக்கு தெரியும் ‘ எப்படி பணம் புரட்டுவது’ என்று. அமெரிக்க அரசியல் என்பது வேறு . . ஒரு இலாபகரமான தொழிற்சாலையின் நிர்வாகம் என்பது வேறு என்பதை அமெரிக்க பழமைவாதிகள் புரியாதது வியப்பல்ல.
அமெரிக்கா என்பது . .’’சர்வதேச பொலிஸை’’ நடத்தும் வல்லரசு. இலாபமீட்டும் ஒரு தனி நிறுவனமல்ல என்பதே யதார்த்தம்.
ஒரே நேரத்தில் உலகின் பல நாடுகளிற்க்கு இறக்குமதி வரி விதிப்பது என்பது நீண்ட காலத்திற்குரிய வெற்றிகரமான பொருளாதார கணிப்பீடாகாது.
அமெரிக்கா என்பது.’’சர்வதேச பொலிஸை’’ நடத்தும் வல்லரசு. மேற்க்கு ஜரோப்பாவுடன் இணைந்து ரஸ்சியா . .சீனாவை எதிர்கொள்ள ஏற்படுத்திய கூட்டமைப்பானதே ‘நேட்டோ” . இன்று இதற்குள்ளே பிளவு தோன்றிவிட்டது. உக்ரையின் யுத்தத்தின் மூலம் ரஸ்சியாவை பலவீனமடைய வைப்பதே ஒட்டு மொத்த நேட்டேவின் நோக்கமாகும். இந்த நோக்கம் பிழைத்தது மட்டுமல்ல இதனால் நேட்டோவே பிளவடைந்தது. . . நல்ல விடயம்.
உண்மையில் உக்ரைன் நாட்டுடன் ரஸ்சியா யுத்தம் நடத்தவில்லை. நேட்டோ நாடுகளுடன்தான் யுத்தம். உக்ரையின் ஒரு கருவி மட்டுமே . . ஒரு அம்பு. அதே பொறிமுறையைத்தான் தாய்வான் நாட்டினை ஒரு துருப்பு சிட்டாக சீனாவிற்க்கு எதிராக ஏகாதிபத்திய நேட்டோ நாடுகள் பிரயோகிக்க முயல்கின்றன.
நேட்டோ கூட்டமைப்பின் தோற்றம். . வல்லரசுகளின் பனிப்போர். . அணுவாயுத போட்டி . . .என்பனவற்றின் வரலாற்றை தெரியாதவர்கள் ரஸ்சியாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாக கணிப்பதில் தவறில்லை.
பனிப்போரின் பின்னர் ஏற்பட்ட தோல்வியால் ரஸ்சியா பெற்ற அவமானம் காரணமாக நேட்டோ வில் கோபம் கொண்ட ரஸ்சிய மக்களின் உணர்வை . . ஜெல்சின் . . புட்டின் .. என்போர் ‘ ரஸ்சிய தேசியவாதம்’ ஆக்கினர். இதுவே புட்டினின் நீண்ட கால ஆட்சிக்கு வழிவகுத்தது.
ரஸ்சியா . . சீனா என்ற நாடுகளில் இருந்தது சரியான சோஸலிசமா இல்லையா என்ற விவாதத்தை தவிர்த்தால். ..
ரஸ்சியா .சீனா போன்ற பாரிய பொருளாதார ‘தாங்குநிலை’( sustainable ) கொண்ட நாடுகளை பலவீனப் படுத்துவதோ இல்லை பிளவுகளை தோற்றுவித்து சிறிய நாடுகளாக்குவதேதான் ஏகாதிபத்தியங்களின் நோக்கம்.
நேட்டோவில் இதுவரையில் மேற்க்கு ஜரோப்பிய நாடுகள் தமது ‘’பெரியண்ணனாக’’ அமெரிக்காவை வரித்துக்கொண்டன. இன்று பெரியண்ணனான அமெரிக்கா மற்றைய நேட்டோ நாடுகளை கை கழுவியது என்பது ட்ரம்ப் அவர்களது வெறும் கற்றுக்குட்டி தனமான அரசியல் மட்டும் அல்ல.
இன்றைய புதிய உலக ஒழுங்கில் . . அரசியல் . . பொருளாதாரம். .தொழில்நுட்பம் . . இராணுவம் .. .என்ற விடயங்களில் இதுவரையில் நேட்டோ நாடுகளே மேல்நிலையில் இருந்தன. இந்த நிலை என்பது ஆட்டம் கண்டுவிட்டது. எனவே அமெரிக்காவின் ட்ரம்ப். . ஒரு மாற்று வழியில் தன்னை தொடர்ந்து ‘’ உலக பொலிஸ்காரனாக ’’ நிலைநிறுத்த முனையும் தந்திரங்கள்தான் பின்வருமாறு அமைகின்றன.
கனடாவை 51 மாநிலமாக்குதல்
பனாமா கால்வாய்
கிறீன்லான்ட் இல் கைவைத்தல்
நேட்டோவில் மேற்க்கு ஐரேப்பாவை கை கழுவுதல்
உக்ரையின் யுத்தத்தில் ரஸ்சியாவுடன் டீல் அடித்தல்
தாறுமாறான இறக்குமதி வரிவிதிப்புகள். . . என்பனவாகும்
. எனவே .இந்த வருட இறுதிக்குள் மேற்குறித்த நடவடிக்கைகளின் விளைவுகள் அமெரிக்காவை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளலாம் என்பது பல பொருளாதார வல்லுனர்களின் கணிப்பாகும். ஐரேப்பிய நாடுகளும் தமக்கான பொருளாதார பின்னடைவினை ஏற்கனவே ஆரம்பித்த விட்டன.
காலனிய காலத்தின் பின்னர் வலிமை பெறும் நாடுகளை போர் மூலம் உருக்குலைப்பதே நேட்டோவின் பொறிமுறையாகும். அன்று . . ஈராக் . . லிபியா போன்ற நாடுகள் விட்ட தவறுகளில் இருந்து ஈரான் பாடங்களை கற்று விட்டது . அணுவாயுதத்தை நிறுவியது மட்டுமல்லாமல் ரஸ்சியா சீனாவுடன் நெருங்கிய இராணுவ கூட்டுப்பயிற்சியை தொடர்வதும் நல்ல அறிகுறியே.
நேட்டோவிற்க்கும் ரஸ்சியாவிற்க்கும் இடையில் உக்ரைனில் நடைபெறும் யுத்தம் உச்சத்தை அடைந்தால் யார் வெற்றியடைவது என்பதுபாரிய கேள்விக்குறியே. காரணம் யுத்தத்தின் பகைப்புலம் . . ஐரேப்பா என்பது ஒன்று. . . மற்றையது அணு ஆயுதத்தின் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகப் பெரியது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் யப்பானில் அமெரிக்கா செய்த அணுவாயுத மிரட்டல் என்பதன் பின்னர் ரஸ்சியா நல்ல பாடத்தை கற்றது, மிக அமைதியாக தானது அணுவாயுதம் மட்டுமல்ல பல மடங்காக தனது இராணுவ கட்டமைப்பையும் பலப்படுத்தியது.
எதிர் வரும் வருடங்களில் உலகில் நேட்டோவின் ஒற்றை துருவ ஆதிக்கம் உடைவினை ஆரம்பிகலாம்.
தொடர்ந்து ‘’பல்துருவ’’ ஆளுமை ஆரம்பிக்கும் அறிகுறி தோன்றலாம்.
வரலாறு . . இடைவெளிகளை விட்டு வைக்குமா. . ?
Sabesan Sinn


