TamilsGuide

கனடாவில் தமிழர் இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

Mark Carney அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள். இவர் கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்றார். ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் சுதேச உறவுகள் அமைச்சராக பதவி வகித்தவர். ஈழத்தமிழரான இவர் கிளிநொச்சித் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் புதல்வராவார்.

இரண்டாமவர் இந்தியத் தமிழரான அனிதா ஆனந்த், கனடாவின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார். Justin Trudeau அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் அந்தப் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கருவுல வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு பதவி புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னேரே வேறு அமைச்சு பதவிகளை வகித்த தமிழராவார்.

தமிழர்கள் என்ற வகையில் இருவரையும் ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றது.

Leave a comment

Comment