TamilsGuide

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் மர்மமான முறையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று காலை வியாழக்கிழமை (13) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment