TamilsGuide

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 563,427 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 70,449 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து நாட்டுக்குப் பிரவேசித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,523 ஆகப் பதிவாகியுள்ளதுடன் ரஷ்யாவில் இருந்து 9,475 பேரும், ஜேர்மனியில் இருந்து 6,626 பேரும், பிரித்தானியாவில் இருந்து 6,580 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment