TamilsGuide

பிராம்ப்டனில் பெண் கொலை – ஒருவர் கைது ; சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்த குழந்தை 

கனடாவில் பிராம்ப்டனில் அமைந்துள்ள குடியிருப்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கென்னடி வீதி சவுத் மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ வடக்கு பகுதியில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிராம்ப்டனில் பெண் கொலை – ஒருவர் கைது ; சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்த குழந்தை | Woman Dead Following Disturbance Call At Brampton

போலீசார் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது ஒரு பெண் தீவிர காயங்களுடன் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 40 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற குடியிருப்பில் குழந்தை ஒன்று இருந்ததாகவும், போலீசாரை தொடர்புகொண்டதும் அந்த குழந்தையே எனவும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.  
 

Leave a comment

Comment