சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ் காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார, பூஜா ஹெக்டே அவரது வசங்களை தமிழில் தானே டப்பிங் செய்துள்ளதாகவும். படத்தின் நடிக்கும் போதுக் கூட முழுப்பக்க வசனமாக இருந்தாலும் பூஜா ஹெக்டே மிகவும் கடின உழைப்பை போட்டு தமிழ் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பூஜா ஹெக்டே தான் நடித்த படங்களில் தமிழில் டப் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.


