TamilsGuide

அமெரிக்க நிறுவனங்கள் டிக் டொக் செயலியை வாங்க போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு ட்ரம்ப் அனுமதி வழங்கியிருந்தார்.

இதற்காக டிக்டொக்குக்கு 75 நாட்கள் கால அவகாசமும் அளித்திருந்தார்.

இதையடுத்து, ஆரக்கிள், வோல்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் டிக்டொக் விவகாரம் குறித்து ட்ரம்ப் கூறியதாவது, டிக்டொக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், பல நிறுவனங்களும் டிக்டொக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

Leave a comment

Comment