TamilsGuide

அடுத்தக்கட்டத்தில் சர்தார் 2 பணிகள் - விரைவில் அடுத்த அப்டேட்

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சர்தார் 2 படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக சர்தார் 2 பட்த்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதனால் காயமுற்ற நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார். 
 

Leave a comment

Comment