துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை வேட்டையாட வந்த போது பிரதேசவாசிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு நேர நடமாடும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உரிய இடத்திற்கு சென்று பார்த்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பன்றியையும் விலங்குகளை வேட்டையாடிய ஆறு நபர்களையும் கைது செய்தனர்.
இதன்போது, 03 12-துளை ரவைகள், 03 ஸ்கால்பெல்கள், ஒரு கோடாரி, ஒரு கை கோடாரி, 02 டிராகன் லைட்டுகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 71 வயதுடைய மாவத்தகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் போது யஹலதென்ன பிரதேசத்தில் வீதியோரமாக உள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 12 போர் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் மாவத்தகம பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.