TamilsGuide

உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், முன்னாள் சபாநாயகர் எந்த உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடப் போகிறார் என்பதை இதன்போது வெளிப்படுத்தவிலை.
 

Leave a comment

Comment