கனடிய உணவு மற்றும் வேளாண்மை பொருட்கள் மீது சீனா, புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது.
2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வரிகள் இவ்வாறு கனடா மீது விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கை, கனடா கடந்த அக்டோபரில் அறிவித்திருந்த வரிகளுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிகள் மார்ச் 20ஆம் திகதி முதல் அமலுக்கு வரும். 100% மற்றும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள், உலோகங்கள் மற்றும் அலுமினிய பொருட்கள் மீது விதித்த வரிகளுக்க பதிலடியாக இந்த வரியை சீனா அறிவித்துள்ளது.