TamilsGuide

அஷேன் பண்டார கைது

நபரொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார, பிலியந்தலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அஷேன் பண்டாரவுக்கும் அவரது  வீட்டிற்கு அருகே வசிப்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment