TamilsGuide

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு,  வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த  கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment